2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘சிற்றியுடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்கள் இல்லை’

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே, கழகத்துடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

நடப்புப் பருவகாலத்துடன் 33 வயதான டி ப்ரூனேயின் சிற்றியுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் இன்று முதல் அவர் ஏனைய கழகங்களுடன் பேரம்பேசல்களில் ஈடுபடலாமென்பது குறிப்பிடத்தக்கது.

சிற்றியில் 2015ஆம் ஆண்டு இணைந்த டீ ப்ரூனே 269 போட்டிகளில் விளையாடி 70 கோல்களைப் பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X