Shanmugan Murugavel / 2021 மே 09 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக, ஹகிம் ஸியெச், மார்கோஸ் அலோன்ஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங் பெற்றிருந்தார்.
இதேவேளை, லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை சண் ஹெயுங்-மின் பெற்றார். லீட்ஸ் சார்பாக, ஸ்டூவர்ட் டலாஸ், பற்றிக் பம்ஃபோர்ட், றொட்றிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago