Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிலெஸியா டயமன்ட் லீக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான நோவா லைல்ஸை வீழ்த்தி ஜமைக்காவின் கிஷேன் தொம்ஸன் முதலிடம் பெற்றார்.
வேகமான ஆரம்பத்தைப் பெற்ற தொம்ஸனை ஒருபோதும் வீழ்த்தப்படக்கூடியவர் போன்று இருக்கவில்லை. உறுதியான ஓட்டத்தை மேற்கொண்டு போட்டித் தூரத்தை 9.87 செக்கன்களில் கடந்திருந்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் லைல்ஸ் 9.90 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த நிலையில், அவரின் சக ஐ. அமெரிக்கரான கென்னி பெட்னரெக் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை பெண்களுக்கான 3,000 மீற்றர் ஓட்டத்தில் முதலிடம் பெற்ற கென்யாவின் பெய்த் கிப்யெகொன் உலக சாதனையை முறியடிப்பதை நெருங்கியிருந்தார். சீனாவின் வான் ஜுன்ஸியா எட்டு நிமிடங்கள் ஆறு செக்கன்கள் 11 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்தது சாதனையாக இருக்கும் நிலையில் எட்டு நிமிடங்கள் ஏழு செக்கன்கள் 04 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தார்.
பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் போட்டித் தூரத்தை 22.17 செக்கன்களில் கடந்த உலக சம்பியனான ஷெரிக்க ஜக்சன் முதலிடம் பெற்றிருந்தார்.
இதுதவிர ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் உலக சாதனையாளரான கர்ஸ்டென் வொர்ஹொல்ம் 46.28 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றிருந்தார்.
இதேவேளை ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனையாளரான மொன்டோ டுப்லான்டில், 6.10 மீற்றர் பாய்ந்து முதலிடம் பெற்றிருந்தார்.
27 minute ago
31 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
36 minute ago
51 minute ago