Shanmugan Murugavel / 2026 மார்ச் 16 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீன குரான் பிறீயை மெர்சிடீஸ் அணியின் கிமி அந்தொனெல்லி வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இப்பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த இத்தாலியின் அந்தொனெல்லி முதலாமிடத்தை தக்க வைத்த நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த அந்தொனெல்லியின் சக மெர்சிடீஸ் அணியின் ஓட்டுநரான ஜோர்ஜ் ரஸலும் இரண்டாமிடத்தை தக்க வைக்க, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் லூயிஸ் ஹமில்டனும் மூன்றாமிடத்தை தக்க வைத்திருந்தார்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பின்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பிரித்தானியாவின் ரஸல் காணப்படுகின்றார். 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அந்தொனெல்லியும் 34 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பெராரி அணியின் லெக்கலெர்க்கும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .