Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஏ போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர்-12 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 171/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வனிடு ஹஸரங்க 71 (47), பதும் நிஸங்க 61 (47), தசுன் ஷானக ஆ.இ 21 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் லிட்டில் 4/23 [4], மார்க் அடைர் 2/35 [4], போல் ஸ்டேர்லிங்க் 1/4 [1], கிரேய்க் யங்க் 0/24 [4])
அயர்லாந்து: 101/10 (18.3 ஓவ. ) (பந்துவீச்சு: மஹேஷ் தீக்ஷன 3/17 [4], லஹிரு குமார 2/22 [4], சாமிக கருணாரத்ன 2/27 [3.3], வனிடு ஹஸரங்க 1/12 [4], துஷ்மந்த சமீர 1/16 [3])
போட்டியின் நாயகன்: வனிடு ஹஸரங்க
இதேவேளை, மற்றைய போட்டியில் நெதர்லாந்தை நமீபியா வென்றிருந்தது.
இந்நிலையில், ஷார்ஜாவில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் அயர்லாந்தும், நமீபியாவும் மோதவுள்ளதுடன், இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நெதர்லாந்தும், இலங்கையும் மோதவுள்ளன.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago