2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

சுப்ராயன் மீது முறைப்பாடு

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் பிரெனெலன் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணியானது சந்தேகத்துக்குரியதென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய சுப்ராயன் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ட்ரெவிஸ் ஹெட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையால் அனுமதிக்கப்பட்ட சோதனை நிலையமொன்றில் 14 நாள்களுக்குள் சுப்ராயன்ஹ் தனது பந்துவீச்சுப்பாணியை சுயாதீன மதிப்பீட்டுக்குள்ளாக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவுகள் வரும் வரையில் அவர் தனது பந்துவீச்சை தொடர முடியும்.

முன்னதாக 2012ஆம் ஆண்டில் சுப்ராயனின் பந்துவீச்சுப் பாணி விதிகளுக்கு முரணானதென கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2013ஆம் ஆண்டு பந்துவீச்சுப்பாணியை மாற்றி மீள சோதனை செய்யப்பட்ட பின்னரே பந்துவீச அனுமதிக்கப்பட்டிருந்தார். 2014ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக்கிலும், 2015ஆம் ஆண்டு உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டியிலும் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பந்துவீசத் தடை விதிக்கப்பட்டிருந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு இரண்டாவது தடவையே சோதனையில் சுப்ராயன் தேறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .