2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சுவிற்ஸர்லாந்தை வென்றது ஸ்பெய்ன்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், ஸ்பெய்னில் இன்று அதிகாலை நடைபெற்ற குழு டி போட்டியொன்றில், மிகேல் ஒயர்ஸ்பல் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்தை ஸ்பெய்ன் வென்றது.

இதேவேளை, உக்ரேனில் நடைபெற்ற பிறிதொரு குழு டி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரேனை ஜேர்மனி வென்றிருந்தது. ஜேர்மனி சார்பாக, மத்தியாஸ் ஜின்டர், லியோன் கொரெட்ஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதுடன், உக்ரேன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஷியன் மலினோஸ்கி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .