Editorial / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர் பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பா.கிஸ்கந்தமுதலி தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் 07 ஆண்கள் அணிகளும் 04 மகளிர் அணிகளும் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் மகளிர் கழகம் சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணியும் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணியும் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப் போட்டியில் மகளிர் கழகம் சார்பில் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் செங்கலடி மஞ்சள் தாரகை இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற செங்கலடி மஞ்சள் தாரகை இளைஞர் கழக அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செங்கலடி மஞ்சள் தாரகை இளைஞர் கழக அணி 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஓட்டங்களின் அடிப்படையில் 06 ஓட்டங்களால் செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி வெற்றி பெற்று 2025ம் ஆண்டின் சம்பியனானது.
இறுதிப் போட்டியில் ஆண்கள் கழகம் சார்பில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணியும் ஆறுமுகத்தான் குடியிருப்பு வள்ளுவன் இளைஞர் கழக அணியும் மோதின இதில் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

25 minute ago
2 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
24 Mar 2026