Shanmugan Murugavel / 2021 நவம்பர் 21 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகத் குறைந்தது மேலும் ஒரு பருவகாலமாவது தொடர்ந்து விளையாடப் போவதாக இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் பிரியாவிடை ஒன்றை எதிர்பார்த்தே குறித்த கருத்தை 40 வயதான டோணி வெளிப்படுத்துள்ளார்.
சுப்பர் கிங்ஸின் தேவைகளைக் கருத்திற் கொண்டே தனது ஓய்வு குறித்த எந்த முடிவும் எடுக்கப்படும் என இவ்வாண்டு ஐ.பி.எல்லை சென்னை வென்ற பின்னர் அதன் தலைவராக டோணி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, இந்தியாவில் வைத்து ராஞ்சியில் இறுதியாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை விளையாடியதாகவும், அடுத்தாண்டோ அல்லது ஐந்து ஆண்டுகளிலோ என எனக்குத் தெரியாது, ஆனால் எனது கடைசி இருபதுக்கு – 20 போட்டி சென்னையில் எனத் தான் நம்புவதாக டோணி தெரிவித்துள்ளார்.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago