2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஜோக்கோவிச், செரினா, பெடரர் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாம் நாள் போட்டிகளில், முன்னணி வீரர்களான நொவக் ஜோக்கோவிச், செரினா வில்லியம்ஸ், ரொஜர் பெடரர், அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, மரியா ஷரபோவா, தோமஸ் பேர்டிச் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

ஆண்களில் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சுக்கும் பிரான்ஸின் குவென்டன் ஹலிஸூக்குமிடையிலான போட்டியில் ஜோக்கோவிச், 6-1, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். பெண்களின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சீன தாய்வானின் செய் சு-வெய்யை, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 6-3, 7-5, 6-1 என்ற செட் கணக்கில், உக்ரைனின் அலெக்ஸான்டர் டொல்கோபலோவை வெற்றிகொண்டார்.

பெண்களில் 4ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 6-4, 6-2 என்ற செட் கணக்கில், கனடாவின் ஈகெனி பௌசார்டை வெற்றிகொண்டார். 5ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் அலியக்சன்டர ஸ்னோவிச்சை, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

ஆண்களில் 6ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச், பொஸ்னியாவின் மிர்ஸா பேசிக்கை 6-4, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். 7ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீய் நிஷிகோரி, அமெரிக்காவின் ஒஸ்டின் கிரஜிசெக்கை 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .