Shanmugan Murugavel / 2021 மே 12 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரானது இவ்வாண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இவ்வாண்டு தொடரை நடாத்துவதற்குரிய பொருத்தமான காலப் பகுதியொன்றைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், தொடரின் ஏனைய விவரங்களை இறுதி செய்வதில் தற்போது பணியாற்றுவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ சபையின் தலைவர் கலாநிதி அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடருகு அண்மையாக தொடர் குறித்து இறுதி முடிவொன்றை எடுப்பதற்கு முன்பாக நாட்டின் நிலைமையை இலங்கை கிரிக்கெட் சபை ஆராயவுள்ளதாகவும், நாட்டிலுள்ள சுகாதார நிலைமை குறித்து கருத்து கேட்க சுகாதாரமைச்சுடன் கலந்துரையாடுமெனக் கூறப்பட்டுள்ளது.
1 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago