Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகியோர் விலகியுள்ளனர். தற்காலிக அணித்தலைவராக ஃபஃப் டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர, டேல் ஸ்டெயின் மற்றும் வெர்னோன் பிளந்தர் ஆகியோர் உடற்றகுதி பெற்று அணிக்குத் திரும்பியுள்ளதோடு, 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியத் தொடருக்குப் பின்னர், முதன்முறையாக குழாமில் வெய்ன் பார்னல் இடம்பெற்றுள்ளார்.
கடந்த ஜனவரியில் இடம்பெற்ற இங்கிலாந்துடனான தென்னாபிரிக்காவின் இறுதி டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்காத டு பிளெசிஸ், தற்போது அணித்தலைவராக அணிக்குத் திரும்பியுள்ளதோடு, இவ்வாண்டு புதுவருட டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்ட ஜெ.பி.டுமினியும் குழாமில் இடம்பெற்றுள்ளார். தவிர, சுழற்பந்துவீச்சாளராக டனி பீடிட் மட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, ஸ்டீபன் குக்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர் நிலை வழங்கப்பட்ட நிலை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட வான் ஸில்லும் குழாமில் இடம்பிடித்துள்ளார்.
குழாம்: ஃபஃப் டு பிளெசிஸ், கைல் அபொட், ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, ஸ்டீபன் குக், குயின்டன் டி கொக், ஜெ.பி.டுமினி, டீன் எல்கர், கிறிஸ் மொறிஸ், வெய்ன் பார்னல், வெர்னோன் பிளந்தர், டனி பீடிட், கஜிஸ்கோ ரபடா, டேல் ஸ்டெய்ன், ஸ்டியான் வான் ஸில்
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago