Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாமில் சேர்க்கப்பட்டுள்ள சகலதுறை வீரரான மிலிந்த சிரிவர்தன, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தி, முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிப் போட்டியில் துடுப்பெடுத்தாடிய மிலிந்த சிரிவர்தன, 149 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைக் குவித்தார். இப்போட்டியில் அவர் 6 ஓவர்கள் மாத்திரம் பந்துவீசியிருந்த போதிலும், அவரது துடுப்பாட்டப் பெறுபேறுகள் அவருக்கான வாய்ப்பை ஓரளவு உறுதிப்படுத்தியுள்ளன.
ஜெஹான் முபாரக், உபுல் தரங்க ஆகியோர் இக்குழாமில் சேர்க்கப்பட்டிருக்கப்படாத நிலையில், மிலிந்த சிரிவர்தனவுக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டிருந்த போதிலும், தற்போது அவர் விளையாடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.
இடம்பெற்ற இப்பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 209 ஓட்டங்களைப் பெற்றதோடு, பின்னர் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026