Thipaan / 2016 ஜனவரி 18 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு விரும்புவதாக, இலங்கை கிரிக்கெட் சபையிடம் விண்ணப்பித்துள்ளார்.
26 வயதான திஸ்ஸர பெரேரா, இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும் 110 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 42 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.
எனினும், அண்மைக்காலமாக இலங்கைக்காகத் தெரிவுசெய்யப்படாத இவர், இதற்கு முன்னர் காணப்பட்ட சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவால், மோசமான உடற்தகுக்காகத் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார்.
இதற்கு முன்னரும் ஓய்வுபெற முயன்ற போதிலும், தேர்வாளர்களாலும் கிரிக்கெட் சபையாலும் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
14 minute ago
19 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
2 hours ago
5 hours ago