Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னைய போட்டிகளில் பெறப்பட்ட சோதனை மாதிரிகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, டசின்கணக்கான தடகள வீரர்கள், றியோ டி ஜெனீரோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் தலைவர் தோமஸ் பச், இன்று தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள், 2012ஆம் ஆண்டில் இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பெறப்பட்ட மாதிரிகளை, மிக் அண்மைய விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி, மீளச் சோதனை செய்யப்பட்டதாக, அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாகவே, டசின் கணக்கானோர் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.
ஊக்கமருந்துப் பாவனை தொடடர்பாக, அண்மைக்காலத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாகவும் அறிக்கைகள் காரணமாகவும், ஊக்கமருந்து தொடர்பாக, முன்பை விட அதிகமான கவனம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இலண்டன் ஒலிம்பிக்கில் கூட, ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டோர், போட்டிகளில் பங்குபற்றியதாகக் குற்றச்சாட்டுகள் காணப்பட்டன.
இந்நிலையிலேயே, இம்முறை இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், அவ்வாறான சந்தர்ப்பங்களை இல்லாது செய்யுமுகமாகவே, இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .