2025 மே 20, செவ்வாய்க்கிழமை

டி.எஃப்.சி.சி தொடரைக் கைப்பற்றுமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 20 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை சிம்பாப்வேயும் வென்ற நிலையில் தீர்மானமிக்க போட்டியாக இப்போட்டி அமைகிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில் ஜெஃப்ரி வன்டர்சே ஏனைய வீரர்கள் அனைவரும் தொடர்ச்சித் தன்மையைக் காண்பிக்க வேண்டியுள்ளனர். குறிப்பாக பந்துவீச்சு மேம்படவேண்டியுள்ளது. அந்தவகையில் நுவான் பிரதீப்பை புதுமுகவீரர் நுவான் துஷார பிரதியிடக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக வெற்றி அணியை சிம்பாப்வே மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரின்  வெற்றிக்காக அணித்தலைவர் கிரேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், சிகண்டர் ராசா, றெஜிஸ் சகபாவின் ஓட்டங்கள் அவசியமானதாகக் காணப்படுகின்றது.

தவிர, இனிங்ஸ் முழுவதும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியவர்களாக சிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X