2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டி20 உலககிண்ணத்தை வென்றது இங்கிலாந்து

Freelancer   / 2022 நவம்பர் 13 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான 20க்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி , 2022ஆம் ஆண்டின் சம்பியனாகியுள்ளது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து, 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 52(49), ஜோஸ் பட்லர் 26(17) ஓட்டங்களையும் பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் ஷான் மசூட் 38(28), பாபர் அஸாம் 32(28) ஓட்டங்களையும் இங்கிலாந்து பந்து வீச்சில் சாம் கரன் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷிட், கிரிஷ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

2010ஆம் ஆண்டில் கிண்ணத்தை சுவீகரித்த இங்கிலாந்து, இம்முறை இரண்டாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X