2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘டெஸ்ட் அறிமுகத்தை கிறீன் மேற்கொள்வார்’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த இரண்டு நாள்களில் அதிர்ச்சி நடைமுறைகளில் சகலதுறைவீரர் கமரோன் கிறீன் தேறினால், நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வார் என அவுஸ்திரேலியப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜோ பேர்ண்ஸின் இடம் குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றபோதும் அவரது அனுபவம் அவருக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மர்னுஸ் லபுஷைன் ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் கருதப்படமாட்டார் எனவும் லாங்கர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கிறீன் விளையாடும் பட்சத்தில், ஆறாமிடத்திலிருக்கும் மத்தியூ வேட், ஆரம்பத்துடுப்பாட்டவீரராகக் களமிறக்கப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .