2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 29 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது புலவாயோவில் நாளை  பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

கேன் வில்லியம்சன் இல்லாதபோதும் பலமானதாகவே நியூசிலாந்து காணப்படுகிறது. குழாமுக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் திரும்பியுள்ள ஹென்றி நிக்கொல்ஸுக்கு தனது பெறுமதி இன்னுமிருக்கிறது என்பதை உணர்த்துவதற்கான தொடர் இத்தொடர் நோக்கப்படுகிறது.

மறுபக்கமாக வேகப்பந்துவீச்சுப் பக்கம் வில் ஓ ருர்க்கே, மற் ஹென்றியுடன் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக புதுமுகவீரர் மத்தியூ பிஷரா அல்லது ஜேக்கப் டஃபியா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சிம்பாப்வேயைப் பொறுத்த வரையில் சிகண்டர் ராசா, பென் கர்ரன் போட்டியில் விளையாடுவது அவ்வணிக்கு பலத்தையளிக்கின்ற நிலையில், ஷோன் வில்லியம்ஸ், பிரயன் பென்னிட், அணித்தலைவர் கிறேய்க் எர்வினுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினாலே நியூசிலாந்துக்கு சிம்பாப்வே சவாலை வழங்க முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .