2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

டைஸன் பியூரிக்கெதிராக அதிபாரப் பட்டங்களை தக்க வைத்த உசிக்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவில் இன்று (22) நடைபெற்ற பிரித்தானியாவின் டைஸன் பியூரிக்கெதிரான சண்டையில் ஏகமனதான தீர்மானத்தின்படி தனது உலக அதிபாரப் பட்டங்களை உக்ரேனின் ஒலெக்ஸான்டர் உசிக் தக்க வைத்து தொடர்ந்தும் தோல்வியடையாதவராகக் காணப்படுகின்றார்.

36 வயதான பியூரியை விட உயரம், நிறையில் குறைவாக இருந்தபோதும் 116-112 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்று நடுவர்களின் புள்ளிகளையும் பெற்று 37 வயதான உசிக் வென்றிருந்தார்.

அந்தவகையில் இதுவரையில் பங்கேற்றிருந்த 23 போட்டிகளிலும் உசிக் தோல்வியடையவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X