2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

தொங்குநிலையில் யுனைட்டெட்டின் சம்பியன்ஸ் லீக் தகுதி

Shanmugan Murugavel   / 2016 மே 11 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில்கடந்த செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற போட்டியில், 2-3 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்ததுடன் அவ்வணியின் சம்பியன்ஸ் லீக்குக்கான தகுதியும் கேள்விக்குறியாகியுள்ளது.

பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளே சம்பியன்ஸ் லீக்குக்கு தெரிவாகும் என்ற நிலையில், மேற்படி போட்டியின் முடிவில் 63 புள்ளிகளுடன் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் காணப்படுவதுடன் 65 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் வாரயிறுதியில் சுவான்சீ சிற்றியுடனான போட்டியில் மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்து, பௌர்ண்மௌத்துடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றாலே அவ்வணி சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெற முடியும்.

இதேவேளை, உப்டான் பார்க் என அழைக்கப்படும் பொலேன் மைதானத்திலிருந்து 112 வருடங்களுக்கு பிறகு வெற்றியுடன் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் விடைபெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .