Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 26 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளர்களும், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்த எல்லா வகையான வழிமுறைகளையும் கையாண்டதாகவும் எனினும் உண்மையான துடுப்பாட்ட ஆடுகளத்தில் வேகமாக எதிரணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது எந்த வழிமுறைகளும் கைகொடுக்கவில்லை எனத் இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் தோணி தெரிவித்துள்ளார்.
இந்தப்போட்டியில் பவ் டுபிலிஸிஸ் 133, ஏபி டீவில்லியர்ஸ் 119, குவான்டன் டீ கொக் 109 ஓட்டங்கள் கைகொடுக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438 ஓட்டங்களை குவித்திருந்தது. பந்துவீச்சில் இந்திய அனைத்து பிரதான பந்துவீச்சாளர்களும் ஒரு ஓவருக்கு ஏழுக்கு மேற்பட்ட ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி வெறும் 224 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. துடுப்பாட்டத்தில் ரகானே 87, தவான் 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக கஜிஸ்கோ ரபடா 4, டேல் ஸ்டெயின் 3 விக்கெட்களைப் கைப்பற்றியிருந்தனர்.
ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சுழல் காணப்படவில்லையென்றும், எமது வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யக்கூடியவர்கள் எனினும் தட்டையான ஆடுகளத்தில் துடுப்பாட்டவீரர்களை பின்னங்காலுக்கு பின் தள்ளக்கூடியவர்களாக இருக்கவில்லையென்றும் டோணி தெரிவித்தார்.
அணியில் நிரப்புவதுக்கு இன்னும் இடங்கள் உள்ளதாகவும் கட்டமைக்கப்பட்ட அணியாக இல்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ள டோணி, பிரதானமாக சகலதுறை வீரரின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம், 2019ஆம் உலகக்கிண்ணம் போன்ற நீண்டகால இலக்குகளை கருத்திற்கொண்டு வெவ்வேறான வீரர் கூட்டணியை பயன்படுத்துவது அவசியம் என்றார்.
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago