2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில், முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, பின்னிலையில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, இத்தொடரைக் கைப்பற்றியது.

கேப் டௌனில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட இங்கிலாந்து, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்தது. துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 112 (128), பென் ஸ்டோக்ஸ் 29 (32), ஜோ றூட் 27 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டேவிட் விஸே, கஜிஸ்கோ றபடா, இம்ரான் தாஹிர் மூவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 22 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், பின்னர் 44 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஏபி.டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 101 (97), ஹஷிம் அம்லா 59 (93), டேவிட் விஸே ஆட்டமிழக்காமல் 41 (32) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றீஸ் டொப்லி, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக ஏபி.டி வில்லியர்ஸூம், இத்தொடரின் நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸூம் தெரிவாகினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .