2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

தொடர்ச்சியாக 5ஆவது தடவையாக சீரி ஏ பட்டத்தை கைப்பற்றியது ஜுவென்டஸ்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சீரி ஏ தொடரின் சம்பியன்களாக, தொடர்ச்சியாக ஐந்தாவது பருவகாலமாக ஜுவென்டஸ் முடிசூடிக்கொண்டது.

பியோரென்டினாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (24), 2-1 என்ற கோல்கணக்கில் வென்றபோதே சம்பியன் பட்டத்துக்கு அருகில் வந்த ஜுவென்டஸ், கடந்த திங்கட்கிழமை (25) இடம்பெற்ற போட்டியில், றோமாவுடன் நாபோலி 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்த நிலையில் சீரி ஏ பட்டத்தை ஜுவென்டஸ் கைப்பற்றியது.

கடந்தாண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி, முதலிடத்தில் இருந்த அணியை விட 11 புள்ளிகள் பின்தங்கி சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருந்த ஜுவென்டஸ், அதன் பின் எழுச்சி கொண்டு, அதன் பின்னர் தான் விளையாடிய 25 போட்டிகளில் 24இல் வென்றிருந்ததுடன் மற்றையதை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இந்தப் பருவகாலத்துடன் சேர்த்து, இதுவரையில் ஏழு சீரி ஏ பட்டங்களை ஜுவென்டஸ் அணியின் தலைவரான 38 வயதான ஜையுலுஜி புபான் வென்றுள்ளார். இவை தவிர, 2005, 2006ஆம் ஆண்டுகளில் ஆட்ட நிர்ணய சதி காரணமாக இரண்டு சீரி ஏ  பட்டங்கள் பறிக்கப்பட்டிருந்தன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .