Shanmugan Murugavel / 2015 நவம்பர் 09 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் நீஷம், முதுகுப் பகுதியில் உபாதைக்குள்ளானதைத் தொடர்ந்து, இடம்பெற்று வருகின்ற மூன்று போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் மிற்சல் மக்லநகன், நியூசிலாந்துக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற இங்கிலாந்துச் சுற்றுப் பயணத்தின்போதும் முதுகு உபாதை காரணமாக நீஷம் விலகியிருந்தார். இந்நிலையில், அதிலிருந்து மீண்டு, கடினமான உழைப்பின் மூலமே பூரணமான உடற்றகுதியை அடைந்திருந்தார்.
இந்தவேளையில், அதிக ஓவர்கள் பந்துவீசும் போது, மீண்டும் முதுகுப் பகுதியில் நோவு ஏற்பட்டதாகவும், மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நியூசிலாந்துக்குச் நீஷம் செல்வார் என்றும் அங்கு அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பாடுவார் என்றும் நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹேஸன் கூறியுள்ளார். தவிர, தற்போதைய நிலையில், நீஷமின் முழு உடல்நலமும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள போட்டிகளில் அவர் தயாராவதே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேணில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நீஷம், 20 ஓவர்கள் பந்துவீசியிருந்தார். ஏற்கனவே இப்போட்டியின் இரண்டாம் நாளில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி, மைதானத்திலிருந்து வெளியேறிய நிலையில், அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேர்த்தில் ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்கேற்பாடு சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026