2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், கடந்த புதன்கிழமை (03) இடம்பெற்ற போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டக்-வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி 39 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ‌பி டீவில்லியர்ஸ், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50ந ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 399 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜோஸ் பட்லர் 105 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தலா 57 ஓட்டங்களையும் ஜோ ரூட் 52 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக, கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாகீர், மேர்ச்சண்ட் டீ லஞ்சே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 400 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. அக்கணத்தில், தென்னாபிரிக்க அணி 290 ஓட்டங்களைப் பெறவேண்டி இருந்த நிலையில் 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டீ கொக் ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்களையும் பப் டூ பிலிசிஸ் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக மொயின் அலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக குவான்டன் டீ கொக் தெரிவானார்.

இரண்டு அணிகளுக்கிடையிலான அடுத்த போட்டி, நாளை மறுதினம் சனிக்கிழமை (06) இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .