2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 04 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் மேற்கிந்தியத் தீவுகளில் பங்கேற்கும் முக்கோணச் சுற்றுத் தொடரின் முதலாவது போட்டியில், தென்னாபிரிக்கவை மேற்கிந்தியத் தீவுகள் தோற்கடித்துள்ளது.

கயானாவில் நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி.டீவில்லியர்ஸ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக றைலி றொஸோ 61 ஓட்டங்களையும் ஏ.பி.டீவில்லியர்ஸ் 31 ஓட்டங்களையும் குயின்டன் டீ கொக் 30 ஓட்டங்களையும் ஜெ.பி.டுமினி 23 ஓட்டங்களையும் ஹஷிம் அம்லா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சுனில் நரைன் ஆறு விக்கெட்டுகளையும் கார்லோஸ் பிராத்வெயிட் இரண்டு விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர், ஜெரோம் டெய்லர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 48.1 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக கிரன் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் ஜோன்சன் சார்ள்ஸ் 31 ஓட்டங்களையும் டரன் பிராவோ 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஆரோன் பான்கிஸோ 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹீர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சுனில் நரைன் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .