2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்கக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம், இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்து பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், காயத்திலிருந்து குணமடைந்து வரும் தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்பெற்றுள்ளார். மறுகணம், தென்னாபிரிக்க அணியின் மற்றொரு சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான மோர்னே மோர்க்கல் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களாக கஜிஸ்கோ ரபடா, கைல் அபோட் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர்களான கிறிஸ் மொரிஸ், டேவிட் வைஸ் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற மோர்னே மோர்க்கலின் சகோதரரான சகலதுறைவீரர் அல்பி மோர்க்கலும் குழாமில் இடம்பெறவில்லை.

இதேவேளை, சுழற்பந்துவீச்சாளர்களாக குழாமில் இம்ரான் தாகீரும் ஆரோன் பன்கிஸோவும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த எடி லிலி, குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்- பப் டூ பிளெசிஸ் (தலைவர்), கைல் அபோட், ஹஷிம் அம்லா, பர்கான் பெகாத்ரீன், குயின்டன் டீ கொக், ஏ.பி டீ வில்லியர்ஸ், ஜே.பி டுமினி, இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், ஆரோன் பான்கிஸோ, கஜிஸ்கோ ரபடா, ரீலி ரொஸோ, டேல் ஸ்டெயின், டேவிட் வைஸ்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .