2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தடை செய்யப்பட்டார் சுனில் நரைன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், பந்தை வீசியெறிவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் இலங்கையில் இடம்பெற்ற தொடரில் வைத்து, பந்தை வீசியெறிவதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து, அவரின் பந்துவீச்சுத் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அனுமதிக்கப்பட்ட 15 பாகையை விட அதிகமான அளவு, முழங்கையின் விரிவு காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவருக்கான பரிசோதனை, இம்மாதம் 17ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள லொப்பொரோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, அவரின் பந்துவீச்சுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் உள்ளிட்ட உள்ளூர்ப் போட்டிகளிலும் அவரால் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது பந்துவீச்சில் திருத்தம் காணப்படுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கருதுமாயின், பரிசோதனைக்கு முன்னதாக, அச்சபையின் கண்காணிப்பின் கீழ் பங்குபற்ற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .