2025 மே 19, திங்கட்கிழமை

தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய இந்தியா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றமையைத் தொடர்ந்தே முதலாமிடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தியாவும், இங்கிலாந்தும் 269 என்ற ஒரேயளவான தரப்புள்ளிகளைக் கொண்டிருக்கின்றபோதும், இங்கிலாந்தின் 10, 474 புள்ளிகளை விட 10 புள்ளிகள் அதிகமாக இந்தியா கொண்டிருக்கின்றது.

முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. இந்தியா, 2. இங்கிலாந்து, 3. பாகிஸ்தான், 4. நியூசிலாந்து, 5. தென்னாபிரிக்கா, 6. அவுஸ்திரேலியா, 7. மேற்கிந்தியத் தீவுகள், 8. ஆப்கானிஸ்தான், 9. இலங்கை, 10. பங்களாதேஷ்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X