Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பங்களாதேஷின் அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை மெஹிடி அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 16ஆம் இடத்திலிருந்து 9 இடங்கள் முன்ன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் பங்களாதேஷுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில்170 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் சல்மான் அக்ஹா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 18ஆம் இடத்திலிருந்து 9 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
9 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Mar 2026