2026 மே 19, செவ்வாய்க்கிழமை

dd

தவறுதலாக மாற்றப்பட்டதால் ஆவேசமடைந்த நெய்மர்

Shanmugan Murugavel   / 2026 மே 18 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிய சீரி ஏ தொடரில், சா போலோவில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற கொரிடிபாவுக்கெதிரான போட்டியில் தவறுதலாக மாற்று வீரராக நெய்மர் பிரதியிடப்பட்டிருந்தார்.

கெண்டைக்கால் பின்தசைக் காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக தற்காலிகமாக களத்துக்கு வெளியே நெய்மர் இருக்கும்போது நான்காவது மத்தியஸ்தர் நெய்மரின் 10ஆம் இலக்கத்தைக் காண்பிக்க றொபினியோ ஜூனியரால் பிரதியிடப்பட்டிருந்தார்.

எனினும் கொன்ஸலோ எஸ்கோபாரையே றொபினியோ ஜூனியர் பிரதியிட வேண்டி இருந்ததுடன், களத்துக்கு மீண்டும் வர முற்பட்டபோது மஞ்சள் அட்டை காட்டப் பெற்றிருந்தார்.

இதைத் தொடர்ந்து வீரர்களை மாற்றும் சிட்டையை அதிகாரிகளிடமிருந்து பறித்த நெய்மர், தொலைக்காட்சி கமெராக்களுக்கு காண்பித்து எஸ்கோபாரே வெளிவர வேண்டியவர் எனக் காண்பித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X