Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்பதாக இந்திய முகாமில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
வீரர்களில் ஷீகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருத்துராஜ் கைகவாட்டுக்கும் மேலதிக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏனையோரில் களத்தடுப்புப் பயிற்சியாளர் டி. டிலிப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், பெளதிகவியல் நிபுணர் ரஜீவ் குமாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாயங்க் அகர்வால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதன் காரணமாக முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை லோகேஷ் ராகுல் தவறவிடுகின்ற நிலையில், அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், றிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் மாத்திரமே துடுப்பாட்டவீரர்களாகக் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .