2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தியெமிடம் தோற்ற நடால்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 18 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் மூன்றாம்நிலை வீரரான டொமினிக் தியெமிடம் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால் தோற்றுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியியில் 6-7 (7-9), 6-7 (4-7) என்ற நேர் செட்களில் ஒஸ்திரியாவின் தியெமிடம் ஸ்பெய்னின் நடால் தோற்றிருந்தார்.

இதேவேளை, உலகின் எட்டாம்நிலை வீரரான அன்ட்ரே ருப்லெவ்வை 6-1, 4-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் உலகின் ஆறாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் இன்று அதிகாலையில் வென்ற நிலையில் ரஷ்யாவின் ருப்லெவ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தியெம் அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தகுதி பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .