Editorial / 2019 ஜனவரி 14 , மு.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படும், பிறீமியர் லீக் தொடரின் பிரிவு “ஏ”-இல், இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை அணியை எதிர்கொண்ட நொன்டெஸ்கிரிப்ற்ஸ் கிரிக்கெட் கழகம் (என்.சி.சி), இலகுவான வெற்றியைப் பதிவுசெய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆரம்பித்து நேற்று (13) வரை இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சி.சி அணி, 218 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மாலிங்க அமரசிங்க 54, சமித ரங்க 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சமிந்த பண்டார 3 விக்கெட்டுகளையும், சானக கொமசரு, இமேஷ் உதயங்க, அனுக் டி அல்விஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துறைமுக அணி, 230 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரிமோஷ் பெரேரா 76, அதீஷ நாணயக்கார 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 4, சச்சிந்திர பீரிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
என்.சி.சி அணி தனது 2ஆவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களைப் பெற்று, தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. சத்துரங்க டி சில்வா 100, மஹேல உடவத்த 93, லஹிரு உதார 64, நிமேஷ குணசிங்க ஆட்டமிழக்காமல் 50, மாலிங்க அமரசிங்க ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றனர்.
354 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய துறைமுக அணி, 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 258 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் சச்சிந்திர பீரிஸ் 5, டிலேஷ் குணரத்ன 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஏனைய பிறீமியர் லீக் போட்டிகளான இராணுவம் எதிர் றாகமை, மூர்ஸ் எதிர் தமிழ் யூனியன், கோல்ட்ஸ் எதிர் பேர்கர், நீர்கொழும்பு எதிர் சராசென்ஸ், கொழும்பு எதிர் பதுரெலிய ஆகிய போட்டிகள், வெற்றி - தோல்வியின்றி நிறைவடைந்தன.
7 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
11 minute ago