2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்கக் குழாமுக்குத் திரும்பிய மஹராஜ்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமில் சுழற்பந்துவீச்சாளரான கேஷவ் மஹராஜ் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை காயத்திலிருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் லிஸாட் வில்லியம்ஸ், மார்கோ ஜன்சன் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர டேவிட் மில்லரும் குழாமுக்குத் திரும்பியுள்ளதோடு, சகலதுறைவீரரான டொனோவன் பெரைராவும் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

அந்தவகையில் றஸி வான் டர் டுஸன், ஜோர்ஜ் லின்டி, பிரெனெலன் சுப்ராயன் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: ஏய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), கொர்பின் பொஷ், டெவால்ட் பிறெவிஸ், டொனோவன் பெரைரா, மார்கோ ஜன்சன், கேஷப் மஹராஜ், கவெனா மபஹா, டேவிட் மில்லர், செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ், ககிஸோ றபாடா, றயான் றிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், லிஸாட் வில்லியம்ஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .