2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்பேணில் இன்று ஆரம்பித்த இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில்

வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ், தென்னாபிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஆரம்பத்திலேயே சரெல் எர்வியை ஸ்கொட் போலண்டிடம் இழந்தது. பின்னர் தெனியுஸ் டி ப்ரூன், கமரொன் கிறீனிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து அணித்தலைவர் டீன் எல்கர் ரண் அவுட்டானதுடன், அடுத்த பந்திலேயே மிற்செல் ஸ்டார்க்கிடம் தெம்பா பவுமா வீழ்ந்திருந்தார். இதையடுத்து காயா ஸொன்டோவும் ஸ்டார்க்கிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த கைல் வெரைன், மார்கோ ஜன்சன் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 52 ஓட்டங்களுடன் வெரைனும், 59 ஓட்டங்களுடன் ஜன்சனும், ககிஸோ றபடாவும் கிறீனிடம் வீழ்ந்தனர். பின்னர் கேஷவ் மஹராஜ் நேதன் லையனிடமும், லுங்கி என்கிடி கிறீனிடமும் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 189 ஓட்டங்களையே தென்னாபிரிக்கா பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா, இன்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களுடனும், மர்னுஸ் லபுஷைன் ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். வீழ்த்தப்பட்ட உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டை றபாடா வீழ்த்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X