2025 மே 19, திங்கட்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் தடுமாறும் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து தடுமாறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், லோர்ட்ஸில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் டீன் எல்கர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் அலெக்ஸ் லீஸ், ஸக் க்றொலியை ககிஸோ றபாடாவிடம் இழந்து தடுமாறியது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் ஜோ றூட்டும் மார்கோ ஜன்சனிடம் வீழ்ந்ததுடன், அடுத்து வந்த ஜொனி பெயார்ஸ்டோவும் அன்றிச் நொர்ட்ஜேயிடம் உடனேயே வீழ்ந்தார்.

இந்நிலையில், ஒலி போப்பும், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸும் இனிங்ஸை நகர்த்திய நிலையில் நொர்ட்ஜேயிடம் ஸ்டோக்ஸ் வீழ்ந்தார். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பென் போக்ஸும் நொர்ட்ஜேயிடம் வீழ்ந்ததோடு மழையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை இங்கிலாந்து பெற்றிருந்தது. களத்தில் ஒலி போப் 61 ஓட்டங்களுடனும், ஸ்டூவர்ட் ப்ரோட் ஓட்டமெதுவும் பெறாமலும் இருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X