2024 மே 08, புதன்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 27 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிரெனடாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக குயின்டன் டி கொக்கின் 37 (24), றஸி வான் டர் டுஸனின் ஆட்டமிழக்காத 56 (38) ஓட்டங்கள் தவிர வேறெவரும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களைப் பெறாத நிலையில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றது. பந்துவீச்சில், பேபியன் அலென் 4-0-18-2, டுவைன் பிராவோ 4-0-30-2, ஒபெட் மக்கோய் 4-0-30-0 ஆகிய பெறுதிகளைப் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு, 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸின் 71 (35), அன்ட்ரே பிளட்சரின் 30 (19) மூலம் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றதுடன், கிறிஸ் கெய்லின் ஆட்டமிழக்காத 32 (24), அன்ட்ரே ரஸலின் ஆட்டமிழக்காத 23 (12) ஓட்டங்களுடன், 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், தப்ரையாஸ் ஷம்சி 4-0-27-1, அன்றிச் நொர்ட்ஜே 2-0-10-0 பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக எவின் லூயிஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X