2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா அயர்லாந்து?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது மலஹிட்டில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு அயர்லாந்து சவாலை வழங்கிய நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் கெவின் ஓ பிரயன், போல் ஸ்டேர்லிங்க், ஹரி டெக்டர் ஆகியோர் தொடர்ச்சியான பெறுபேறுகளை துடுப்பாட்டத்தில் வழங்குமிடத்தில் தென்னாபிரிக்காவுக்கு அயர்லாந்து அதிர்ச்சியை அளிக்கலாம்.

மறுபக்கமாக, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னாபிரிக்கா தமது இறுதி 11 பேரை இறுதி செய்வதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இத்தொடர் காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .