Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 02 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஜொஹன்னஸ்பேர்க்கில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
அந்தவகையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நம்பிக்கையுடன் இலங்கை காணப்படுகின்றபோதும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை வெல்வதற்கு மிகச் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.
அதுவும் டெஸ்ட் தொடரை இழந்தமைக்கு பழிவாங்க தென்னாபிரிக்கா காத்திருக்கும் என்பதோடு, இன்னும் மூன்று மாதத்தில் உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், உலகக் கிண்ணம் குழாமில் இடம்பெறுவதற்கு, றஸி வான் டர் டுஸன், டுவைன் பிறிட்டோறியஸ், வியான் முல்டர், றீஸா ஹென்ட்றிக்ஸ் ஆகியோர் சிறப்பான பெறுபேற்றை வழங்க எதிர்பார்ப்பார்கள் என்ற நிலையில், இலங்கைக்கு இத்தொடர் கடினமானதாகவே அமையவுள்ளது.
அந்தவகையில், மீள்வருகையொன்றைப் புரிந்துள்ள சிரேஷ்ட வீரர் உபுல் தரங்கவாவோடு, குஷல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டாலே தொடரை வெல்வது குறித்து இலங்கை சிந்திக்க முடியும்.
இதுதவிர, அணித்தலைவர் லசித் மலிங்கவை விட ஏனைய பந்துவீச்சாளர்கள் அனுபவம் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றபோதும், டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித ஆகியோரின் மீது நம்பிக்கை காணப்படுவதோடு, தனது பந்துவீச்சுப்பாணியை திருத்தி தடையிலிருந்து மீண்டு வந்துள்ள சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய மீதும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபக்கமாக, இத்தொடருக்கான குழாமில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா இல்லாதபோதும், அணித்தலைவர் பப் டு பிளெஸி, டேவிட் மில்லர், குயின்டன் டி கொக் என பலமானதாகவே துடுப்பாட்டவரிசை காணப்படுகின்றது. பந்துவீச்சுப் பக்கமும் சகலதுறை வீரர்கள் பட்டாளத்துக்கு மேலாக, காயத்திலிருந்து மீண்டு வந்த லுங்கி என்கிடி, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர் என பலமானதாகவே காணப்படுகிறது. வேகமாக பந்துவீசும் புதுமக வீரர் அன்றிச் நொர்ட்ஜே எவ்வாறு செயற்படுவார் என எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
52 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025