Shanmugan Murugavel / 2023 மார்ச் 26 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 11 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே நடைபெற்றது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, டேவிட் மில்லரின் 48 (22), றீஸா ஹென்ட்றிக்ஸின் 21 (12), சிஸன்டா மகலாவின் ஆட்டமிழக்காத 18 (05), ஏய்டன் மார்க்ரமின் 14 (09), றீலி றொஸோவின் 10 (07) ஓட்டங்களோடு 11 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் றொவ்மன் பவலின் ஆட்டமிழக்காத 43 (18), ஜோன்ஸன் சார்ள்ஸின் 28 (14), பிரண்டன் கிங்கின் 23 (08), நிக்கலஸ் பூரானின் 16 (07) ஓட்டங்களோடு 10.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக றொவ்மன் பவல் தெரிவானார்.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago