2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவைச் சுருட்டிய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வரலாற்று வெற்றி பெற்றது.

செளதாம்டனில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, ஜேக்கப் பெத்தெலின் 110 (82), ஜோ றூட்டின் 100 (96), ஜேமி ஸ்மித்தின் 62 (48), ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 62 (32), பென் டக்கெட்டின் 31 (33), வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காத 19 (08) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 415 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஜொப்ரா ஆர்ச்சர் (4), பிறைடன் கார்ஸ் (2), அடில் ரஷீட்டிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களையே பெற்று 342 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அந்தவகையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாக இது பதிவாகியது. முன்னர் இலங்கைக்கெதிராக இந்தியா 317 ஓட்டங்களால் வென்றமையே அதிக ஓட்டங்களால் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பெறப்பட்ட வெற்றியாகக் காணப்பட்டிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஆர்ச்சரும், தொடரின் நாயகனாக றூட்டும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .