2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தெற்காசிய போட்டியில் 8 பதக்கங்களை வென்றார் துரைசாமி விஜிந்த்

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நீலமேகம் பிரசாந்த்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய பூண்டுலோயாவை சார்ந்த துரைசாமி எட்டு பதக்கங்களை வெற்றியீட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றிய இப்போட்டி மும்பை மற்றும் உடுப்பி எனும் இரு வேறு இடங்களில் இடம்பெற்றது.

இதில் மும்பையில் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெற்ற போட்டியில் குண்டு எறிதல், சுற்றியெறிதல் ஆகிய போட்டியில் இரு தங்கப் பதக்கங்களையும், பரிதி வட்டம் எறிதல், வேகநடை ஆகியற்றில் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

அதேபோல கர்நாடகா உடுப்பியில் இம்மாதம் 8 முதல் 10 வரை  இடம்பெற்ற போட்டியில் சுற்றியெறிதல் ,பரிதிவட்டம் எறிதலில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 4*400 ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், குண்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வெற்றியீட்டி மொத்தமாக எட்டு பதக்கங்களை வெற்றியீட்டி தற்போது நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X