2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேசிய கராத்தே போட்டியில் மெதடிஸ்த மாணவன் சாதனை

Editorial   / 2022 நவம்பர் 14 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கே.எல்.ரி.யுதாஜித்

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முருகேந்திரன் குருஷாத் சாதனை படைத்துள்ளார்.

கண்டி மாநகர உள்ளக விளையாட்டு அரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் இடம்பெற்ற மூன்று KATA சுற்று போட்டிகளிலும் அதிகூடிய புள்ளிகளை பெற்று தனது பாடசாலைக்கு தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேவேளை, 2019 இல் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியிலும் இவர் KATA போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் கராத்தே மருயோஷிக்காய் அமைப்பின் கிழக்கு மாகாண போதனாசிரியர் பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன் இவரை பயிற்றுவித்துள்ளதுடன், மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வா.லவக்குமார் மற்றும் பாடசாலை அதிபர் இ.பாஸ்கரன், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியோர்   மாணவனை பாராட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .