Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சட்டோகிராமில் புதன்கிழமை (29) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் 55 (36), அலிக் அதனஸேயின் 52 (33) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை 149 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4-0-21-3, ரிஷாட் ஹொஸைன் 3-0-20-2, நசும் அஹ்மட் 4-0-35-2, தன்ஸிம் ஹஸன் சகிப் 4-0-23-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 150 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஜேஸன் ஹோல்டர் (2), அகீல் ஹொஸைன் (3), றொமாரியோ ஷெப்பர்ட்டிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தன்ஸிட் ஹஸன் 61 (48) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக றொமாரியோ ஷெப்பர்ட் தெரிவானார்.
இரண்டு அணிகளுக்குமிடையிலானமூன்றாவதும் இறுதியுமான போட்டியானது இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
3 minute ago
6 minute ago
10 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
10 minute ago
10 minute ago