Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் வென்றிருந்த நிலையில், ட்ரினிடாட்டில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்று 2-1 என்ற ரீதியில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
இந்தியா: 351/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 85 (92), இஷன் கிஷன் 77 (64), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 70 (52), சஞ்சு சாம்ஸன் 51 (41), சூரியகுமார் யாதவ் 35 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: குடகேஷ் மோட்டி 1/38)
மே. தீவுகள்: 151/10 (35.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: குடகேஷ் மோட்டி ஆ.இ 39 (34), அலிக் அதனஸே 32 (50), அல்ஸாரி ஜோசப் 26 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 4/37, முகேஷ் குமார் 3/30, குல்தீப் யாதவ் 2/25, ஜெய்டேவ் உனத்கட் 1/16)
போட்டியின் நாயகன்: ஷுப்மன் கில்
தொடரின் நாயகன்: இஷன் கிஷன்
இந்நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியானது இன்றிரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago