Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜூன் 28 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டித் தொடரை தென்னபிரிக்கா சமப்படுத்தியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிரனெடாவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை தென்னபிரிக்கா சமப்படுத்தியுள்ளது.
இப்போட்டியின் நாணாயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னபிரிக்கா, குயின்டன் டி கொக்கின் 26 (20), றீஸா ஹென்ட்றிக்ஸின் 42 (30) ஓட்டங்கள் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றது.
பின்னர் இவர்கள் இருவரினது விக்கெட்டுகளையும் கெவின் சின்கிளேயர் கைப்பற்றிய நிலையில், அணித்தலைவர் தெம்பா பவுமாவின் 46 (33) ஓட்டங்கள் மூலம் இனிங்ஸை கொண்டு சென்ற தென்னபிரிக்கா, ஒபெட் மக்கோயிடம் 3, அன்ட்ரே ரஸல் மற்றும் ஜேஸன் ஹோல்டரிடம் தலா ஒவ்வொரு விக்கெட்டைப் பறிகொடுத்து, இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 166 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட இடைவெளிகளில், அன்றிச் நொர்ட்ஜே (1), ககிஸோ றபாடா (3), ஜோர்ஜ் லின்டே (2), தப்ரையாஸ் ஷம்சியிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களையே பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அன்ட்ரே பிளட்சர் 35 (36), பேபியன் அலன் 34 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லின்டே நான்கு ஓவர்களில் 19 ஓட்டங்களையும், ஷம்சி நான்கு ஓவர்களில் 16 ஓட்டங்களையும், நொர்ட்ஜெ நான்கு ஓவர்களில் 27 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக லின்டே தெரிவானார்.
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago