2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தொடரைச் சமப்படுத்துமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஓவலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்ற நிலையில் இப்போட்டியை வென்றாலே தொடரை இந்தியா சமப்படுத்தலாமென்ற நிலையில் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியில் றிஷப் பண்டை துருவ் ஜுரேல் பிரதியிடுவதுடன், ஜஸ்பிரிட் பும்ராவை ஆகாஷ் டீப் பிரதிடுவது உறுதியானதாகக் காணப்படுகின்றது. முன்னர் போல தற்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக ஓவல் ஆடுகளம் காணப்படாத நிலையில் குல்தீப் யாதவ் ஷர்துல் தாக்கூருக்குப் பதில் அணியில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது.

இது தவிர அன்ஷுல் கம்போஜ்ஜுக்குப் பதிலாக பிரசீத் கிருஷ்ணா அல்லது அர்ஷ்டீப் சிங் விளையாடும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் காயமடைந்த அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொஃப்ரா ஆர்ச்சர், லியம் டோஸன், பிறைடன் கார்ஸுக்குப் பதிலாக ஜொஷ் டொங்க், குஸ் அட்கின்ஸன், ஜேமி ஒவெர்ட்டன், ஜேமி பெத்தெல் ஆகியோர் விளையாடவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .