2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

தொடரைத் தக்க வைக்குமா அவுஸ்திரேலியா?

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை தென்னாபிரிக்கா வென்ற நிலையில், தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் அவுஸ்திரேலியா கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையிலுள்ளது.

முதலாவது போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இப்போட்டிக்கான ஆடுகளம் கவனம் பெறுகின்றது. எனினும் இது துடுப்பாட்டத்துக்கு சாதகமானதாக இருக்குமென்றே நம்பப்படுகின்றது.

அந்தவகையில் மர்னுஸ் லபுஷைன், கமரன் கிறீன், ஜொஷ் இங்லிஸ் உள்ளிட்டவர்களிடமிருந்து பொறுப்பான இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆரோன் ஹார்டிக்குப் பதிலாக கூப்பர் கொனோலி அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், ஜொஷ் ஹேசில்வூட்டை ஸ்கேவியர் பார்ட்லெட் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக பிரெனெலன் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை செனுரன் முத்துசாமி அல்லது கொர்பின் பொஷ் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .